பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி ரூபாய் நிதியுதவி !

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி ரூபாய் நிதியுதவி !

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் 8.5 கோடி ருபாய் வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

‘2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

இதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம் என்பதை பிசிசிஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

நம் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்! ‘ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி பாரிஸில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டிகளில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,000ற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதில், 16 விளையாட்டுகளில் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )