மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது
நுவரெலியா பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் காசல்ரி நீர்த்தேக்கத்தின் பிரதான நீரேந்தும் பிரதேசமான பொகவந்தலாவ மஹாஎலியா பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொகவந்தலாவ மற்றும் பலாங்கொட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த மாணிக்கக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka