FRIED சிக்கன் தர்பூசணி 

FRIED சிக்கன் தர்பூசணி 

உணவு பிரியர்களை கவர்வதற்காக சமூக வலைதளங்களில் புதிய உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் அதிகளவில் வெளியாகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் வரவேற்பையும், சில வீடியோக்கள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கிறது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சமையல் கலைஞர் ஒருவர் தர்பூசணியை சிக்கன் மாவில் பூசி, வறுத்த கோழி தர்பூசணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது.

அதில், சமையல் கலைஞர் ஒரு முழு தர்பூசணியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டுகிறார். பின்னர் அந்த தர்பூசணி துண்டுகளின் மீது சிக்கன் மாவு பூசி எண்ணெயில் நன்றாக வறுக்கும் காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )