தேன் மிட்டாய் பிரியரா நீங்கள்?: இனி வீட்டிலேயே செய்யலாம் !
தேன் மிட்டாய் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், அதை எப்படி செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இனி இலகுவாக எப்படி தேன் மிட்டாய் செய்வது எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி – 1 மேசைக்கரண்டி
உளுந்து – 2 மேசைக்கரண்டி
சீனி – 2 கப்
ஃபுட் கலர் – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுந்து, அரிசி ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணித்தியாலம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றை நன்றாக மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில் பேக்கிங் சோடா, ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தொடர்ந்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதான ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து அதில் 2 கப் சீனி சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி சீனி கரையும் வரையில் நன்றாக கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பொரித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணித்தியாலம் ஊற விடவும்.
பின் அதில் சிறிதளவு சீனியைத் தூவி விடவும்.
அருமையான தேன் மிட்டாய் ரெடி.