குழந்தைகளுக்கு பரவும் எயிட்ஸ் !
நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
மேலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 607 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் இது 14 சதவீதம் அதிகமாகும் எனவும் தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எய்ட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.