சமையலுக்கு ஒலிவ் எண்ணெய் பயன்படுத்தலாமா ?
உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சமையல் எண்ணெய் பெரும் பங்காற்றுகிறது.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஒலிவ் எண்ணெய் என ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பிய எண்ணெய்களை பயன்படுத்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக மக்களிடையே ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு நன்மையளிக்கும் என்றொரு கருத்து உள்ளது.
உண்மையில் ஒலிவ் எண்ணெய் நல்லதா ?
நிபுணர்களின் கருத்துப்படி பார்த்தால், சமையலுக்கு ஒலிவ் எண்ணெய் பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.
காரணம், ஒலிவ் எண்ணெயை சூடுபடுத்தும்போது அது ஸ்மோக் பொயின்டை விட சூடாகும்.
இந்த சூட்டினால் எண்ணெயின் கலவைகள் தீப்பொறிகளாக மாறி ஃப்ரீ ரேடிக்கல்களாக மாறுகின்றன. இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
இந்த ரேடிக்கல்கள் நமது டி.என்.ஏ லிப்பிடுகள் புரதங்களுடன் தாக்கம் புரியத் தொடங்குகின்றது.
இதன் காரணமாக இதய நோய்கள், அழற்சி நோய்கள், புற்றுநோயும் ஏற்படக்கூடும்.