அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 01 கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 01 கிலோ கிராம் உளுந்து 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும்.

கோதுமை மா 01 கிலோ கிராமின் விலை 10 ரூபாவினாலும், 01 கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

வெள்ளை அரிசி 01 கிலோ கிராம் 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.

கீரி சம்பா கிலோவொன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபாவாகும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )