உலகளவில் முடங்கிய மைக்ரோசாப்ட்
உலகளாவிய ரீதியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் மைக்ரோசாப்ட் மென்பொருள் செயலிழப்பை சந்தித்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவணம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் உட்பட அமெரிக்காவில் உள்ள பல விமான நிலையங்களும் மேலும் பல நாடுகளின் விமான நிலையங்களும் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளதாகவும் லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச அளவில் வங்கி கட்டமைப்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது