பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் : 39 பேர் பலி : 100இற்கும் மேற்பட்டோருக்கு காயம் !

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் : 39 பேர் பலி : 100இற்கும் மேற்பட்டோருக்கு காயம் !

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி வரும் நிலையில், நில ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி தலைநகரான டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சி மாணவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகம் மட்டுமன்றி டாக்காவில் ஏனைய பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

டாக்காவில் அமைந்துள்ள BTV தொலைக்காட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

குறித்த கட்டிடத்துக்குள் பலர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையறையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )