தேர்தலை தடுப்பதற்கான எவ்வித திருத்தங்களும் முன்வைக்கப்படாது !

தேர்தலை தடுப்பதற்கான எவ்வித திருத்தங்களும் முன்வைக்கப்படாது !

ஜனாதிபதித் தேர்தலைத் தடுப்பதற்கான எந்தவித திருத்தங்களும்
முன்வைக்கப்பட மாட்டாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னரே 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் கொண்டுவரப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று
நடைபெற்றுள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரி வித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் 22 ஆவது திருத்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் அவ்வாறு கொண்டுவரப்படமாட்டாதென தெரிவித்த அவர், தேர்தலை தடுக்கும் எவ்வித திருத்தங்களும் முன்வைக்கப்பட மாட்டாதென்றும், தேர்தலுக்குப் பின்னரே 22 ஆவது திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படலாமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )