இனி இட்லியை இப்படி செய்து பாருங்கள்
இட்லியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இட்லியின் மென்மையும் சுவையும் இன்னும் வேண்டும் வேண்டும் என கேட்கத் தூண்டும் அளவுக்கு சுவையாக இருக்கும்.
சுவையுடன் சத்தும் சேர்ந்து கொண்டால் எப்படியிருக்கும்?
இனி கேழ்வரகு இட்லி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு – 1 டம்ளர்
புழுங்கல் அரிசி – 1 1/4 டம்ளர்
பச்சரிசி – 1 1/4 டம்ளர்
உளுந்து – 3/4 டம்ளர்
வெந்தயம் – 1 கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மேற்கூறப்பட்ட பொருட்களையெல்லாம் கழுவி ஊற வைக்கவும்.
முதல் நாள் மாலை வேளையில் இவற்றை நன்றாக அரைத்து தேவையான அளவு உப்பு போட்டு கரைத்து வைக்க வேண்டும்.
இரவு முழுவதும் இந்தக் கலவை நன்றாக ஊறி இருக்கும்.
பின்னர் காலை எழுந்தவுடன் இட்லித் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, இட்லியாக ஊற்றவும்.
இப்போது அருமையான கேழ்வரகு இட்லி ரெடி.
தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி போன்றவற்றுடன் இந்த இட்லியை தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.