கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின்.
அவரது மகளான மஹ்ரா-வுக்கும், அவரது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமுக்கும் கடந்த ஆண்டுதான் திருமணமாகி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆகின்றன.
இந்நிலையில், ஹைகா மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி.” என்று தெரிவித்துள்ளார்.
CATEGORIES World News