கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடம் !
அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சுரேந்திர வசந்த பெரேராவின் (க்ளப் வசந்த) மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த பாடகர் கே.சுஜீவ பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.