பாதாள குழு உறுப்பினர்கள் 800இற்கும்மேற்பட்டோர் நான்கு மாதங்களில் கைது !

பாதாள குழு உறுப்பினர்கள் 800இற்கும்மேற்பட்டோர் நான்கு மாதங்களில் கைது !

சமூகத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்
பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களில் 800 இற்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்றும் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும், அண்மைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

தற்போது நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும்,
எஞ்சிய சிலர் தற்போது நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்
டுள்ளதாக தெரிவித்த பொலிஸ்மா அதிபர், இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறினார்.

தற்போதுள்ள நிலைமை படிப்படியாக மாற்றப்பட்டு வருவதாகவும், சில சம்பவங்கள்
ஏற்பட்டாலும் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )