வெளிநாட்டமைச்சர்அலி சப்ரி ருமேனியா,போலந்து விஜயம்
வெளிநாட்டமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று ருமேனியா
மற்றும் போலந்துக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை
மேற்கொள்ளவுள்ளார்.
இன்று முதல் 19 வரை அவரது உத்தியோகபூர்வ விஜயம் அமைந்துள்ளதாக வெளிநாட்டமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது அவர் அந்நாட்டின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப்பேசவுள்ளார்.
2023 ஆண்டு முதல் ருமேனியாவின் Bucharest (Bucharest, in southern Romania) நகரில் செயற்பட ஆரம்பித்த புதிய இலங்கைத் தூதரகத்தையும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.