குழந்தைகளும் விரும்பியுண்ணும் ஃப்ருட் கஸ்டர்ட் !
சில குழந்தைகள் பழங்கள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். பழங்களிலுள்ள சத்துக்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கு பழங்களின் சத்து கிடைப்பதற்கு ஒரு ஐடியா உள்ளது. அதுதான் ஃப்ருட் கஸ்டர்ட்.
இனி ஃப்ருட் கஸ்டர்ட் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பழங்கள் – 3 கப்
பால் – 1 1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் – 1/2 கப்
பாதாம் – 10
பிஸ்தா – 10
முந்திரி – 10
செய்முறை
முதலில் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் பால் ஊற்றி கொதிக்கவிடவும்.
பின்னர் மீதியுள்ள அரை கப் பாலில் அரை கப் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை நாம் ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள பாலுடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
பின்னர் அதனுடன் அரை கப் சீனி சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
அதில் பழங்கள் நறுக்கி வைத்துள்ள நட்ஸ் வகைகள் ஆகியவற்றை சேர்த்து பரிமாறவும்.
இப்போது ஃப்ருட் கஸ்டர்ட் ரெடி.