உக்ரைன் போர் : சீனா மீது நேட்டோ குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பொருள் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்
சீனா ஆதரவளிப்பதாக நேட்டோ நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ரஷ்யாவுக்கு அவ்வாறு அளித்துவரும் அனைத்து ஆதரவையும் சீனா நிறுத்த வேண்டுமெனவும் நேட்டோ வலியுறுத்தியுள்ளது.
32 நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பின் 75ஆவது உச்சி மாநாடு அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்ற போதே சீனா மீது இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டு வலியுறுத்தல் விடுக்கப்பட்டதோடு கண்டித்து கூட்டு பிரகடனமொன்றும் வெளியிடப்பட்டது.
சீனாவின் ஏற்றுமதிகளுக்கு தடைகள் இருந்த போதிலும் ரஷ்யாவின் பாதுகாப்பு
கைத்தொழில் துறைக்கு சீனாவின் இயந்திர உபகரணங்களும் ஏனைய உதிரிப்பாகங்களும் இன்றியமையாதவையாகி உள்ளன.
அவை உக்ரைன் மீதான போருக்கு ஊக்கமளிக்கின்றன என்றும் நேட்டோ குறிப்பிட்டுள்ளது.