ஜனாதிபதித் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தும் மற்றொரு மனு நாளை பரிசீலனை !

ஜனாதிபதித் தேர்தலை சவாலுக்கு உட்படுத்தும் மற்றொரு மனு நாளை பரிசீலனை !

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாததால், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை அங்கீகரிக்க முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதால் அரசியலமைப்பு மீறப்படும் எனத் தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனுவை பரிசீலிக்க பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நாளைக் கூடவுள்ளது.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை அண்மையில் உயர் நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்திருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )