படகு கவிழ்ந்ததில் நான்கு ஏதிலிகள் உயிரிழப்பு !
ஆங்கில கால்வாயைக் கடக்கும் முயற்சியின்போது படகு கவிழ்ந்ததில் நான்கு ஏதிலிகள் உயிரிழந்ததாகப் பிரான்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
வடக்கு பிரான்ஸ் கரையோரப் பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதில் 63 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மயக்கமடைந்த நிலையில் இருந்த நான்கு பேரைக் காப்பாற்ற முடியாமல் போனதாகக் கடலோரக் காவல்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தம் உண்மையிலேயே பாரதூரமான சம்பவம் எனப் பிரித்தானிய உட்துறை செயலாளர் வெற்றே கூப்பர் தெரிவித்துள்ளார்.
The further loss of life in the Channel this morning is truly awful. My thoughts are with all those affected.
— Yvette Cooper (@YvetteCooperMP) July 12, 2024
Criminal gangs are making vast profit from putting lives at risk. We are accelerating action with international partners to pursue & bring down dangerous smuggler gangs.
இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் மாத்திரம் 13,000 ஏதிலிகள் சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பிரித்தானியாவில் புதிதாகத் தெரிவாகியுள்ள தொழில் கட்சி அரசாங்கம் ஆட்கடத்தற்காரர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடைமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.