ஆயிரம் கோடியை எட்டும் உலக சனத்தொகை !

ஆயிரம் கோடியை எட்டும் உலக சனத்தொகை !

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் , 2080ஆம் ஆண்டளவில் உலக சனத் தொகையானது 1030 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக சனத் தொகை 820 கோடியாக பதிவாகியுள்ளது.

இது 2080ஆம் ஆண்டாகும் போது 1030 கோடியை எட்டும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2080ஆம் ஆண்டில் உலக சனத் தொகை உச்சத்தை அடைந்து, அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர் வாழ்வார்கள் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )