உலகின் முதல் AI அழகி !

உலகின் முதல் AI அழகி !

செயற்கை தொழில்நுட்பத்தினால் (Artificial Intelligence – AI) பெண் போல உருவாக்கப்பட்ட AI மாடல்களுக்கு இடையில் உலக அளவிலான அழகிப் போட்டி ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில், மொராக்கோவைச் சேர்ந்த கென்ஸா லைலி என்ற செயற்கை நுண்ணறிவு மாடல் மிஸ் AI பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் இந்த AI மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் , பிரான்ஸ் மற்றும் போர்த்துகல் நாடுகளைச் சேர்ந்த AI மாடல்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )