சருமத்தை பொலிவாக்கும் உருளைக்கிழங்கு சாறு !
முகத்திலுள்ள பருக்கள், கருவளையங்கள் ஆகியவற்றைப் போக்குவதற்கு உருளைக்கிழங்கு சாறு பயன்படும் என கூறப்படுகிறது.
அவ்வாறு தினமும் உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தேய்த்தால் என்ன நடக்கும்?
உருளைக்கிழங்கின் சாற்றை முகத்துக்கு தடவும்போது அது சரும பளபளப்புக்கு உதவுகிறது. அத்துடன் இதனை தினமும் பயன்படுத்தும்போது தோலின் நிறத்திலும் ஒருவித மாற்றம் ஏற்படுகிறது.
உருளைக்கிழங்கில் உள்ள என்சைம்கள் மற்றும் விட்டமின் சி ஆகியவை கறுப்பான இடங்களை சரி செய்கிறது.
கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைக் குறைத்து வீக்கங்களையும் சரி செய்கிறது.
முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரந்தால் அதனை குறைப்பதற்கு உருளைக்கிழங்கு உதவும்.
இயற்கையான டோனராக உருளைக்கிழங்கு தொழிற்படுவதோடு சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்கிறது.