பலம் கொடுக்கும் நாவல் பழம்: இவ்வளவு நன்மைகள் இருக்கா?
நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நாவல் பழத்தை வாங்கியுண்ண முடியாது.
ஆனால், நாவல் பழம் உண்பதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் உள்ளன.
அந்த வகையில், நாவல் பழத்தில் குறைவான க்ளைசைமிக் இருப்பதால் இது மாவுச்சத்து சர்க்கரையாக மாறுவதை குறைக்கிறது.
நாவல் பழத்திலுள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் சரி செய்கிறது.
நாவல் பழத்தில் அதிகமான ஆண்டி அக்ஸிடென்ட் உள்ளதால் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்தின் இளமையான தோற்றத்துக்கும் பளபளப்பையும் தருகிறது.
உடல் எடை, குறைவான கலோரிகள், அதிகமான நார்ச்சத்து உள்ளதால் சாப்பிட்டதும் வயிறு நிறைந்துவிடும்.
நாவல் பழத்திலுள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்புகள், அல்சர் மற்றும் ஈறு நோய்களை குணமாக்கும்.
ஆந்தோசைனின் எனும் ஆண்டி ஆக்ஸிடன்ட் தீங்கான ஃப்ரீ ரேடிகல்லை சமப்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.