வேலைநிறுத்தங்களின் பின்னணியில் அரசியல் – கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் !

வேலைநிறுத்தங்களின் பின்னணியில் அரசியல் – கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் !

மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களின் பின்னணியில், ஏதோ அரசியல் பின்னணி இருப்பதாகத் தோன்றுவதாகவும், இது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் வாழ்வதற்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதில் எந்த வாதமும் இல்லை.

என்றாலும், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு முன் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொது வாழ்க்கை குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று (08) அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குரிய கலாநிதி மெதகம தம்மானந்த தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார்.

இதன் போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காதாரம், கல்வி, போக்குவரத்து ஆகிய துறைகள் மக்களின் வாழ்க்கையுடன நேரடியாக தொடர்புபட்ட முக்கிய துறைகளாகும்.

இத்துறைகளில் தொழில் புரிவோர் தொழில் உரிமை மற்றும் கட்டளைகள் மூலம் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஊடாக செயற்படும் போது பொதுமக்களின் வாழ்க்கை, குழப்பத்திற்கு உள்ளாவதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக விதிக்கப்படும் வரிகள் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் அன்றாட வேலை செய்யும் அப்பாவி மக்கள் மீதும் சுமத்தப்படுவதாகவும் அரசாங்க தொழில்களை செய்துகொண்டு போராட்டம் நடத்துபவர்கள் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )