அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி இன்று(25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 292 ரூபாய் 70 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 43 சதமாகக் காணப்பட்டது. 

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 39 சதமாக காணப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )