தோனியின் பிறந்த நாள் இன்று

தோனியின் பிறந்த நாள் இன்று

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனியின் 43 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதன்போது பொலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எம்.எஸ். தோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தல தோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதேவேளை, பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துப் பதிவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )