மன அழுத்தத்துக்கும் உடல் வலிக்கும் என்ன தொடர்பு ?
அன்றாட வாழ்க்கையில் நாம் என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோமோ அதில் ஒன்றாக மன அழுத்தமும் மாறிவிட்டது. மன அழுத்தம் நமது ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
குறிப்பாக பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்பொழுது அவர்கள் அதிகப்படியான உடல் வலியை அனுபவிக்கிறார்கள். மன அழுத்தம் மற்றும் உடல் வலிக்கு இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
மன அழுத்தம் ஏற்படும்பொழுது கழுத்து, தோள்பட்டை, கீழ் முதுகு போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்.
இந்த பகுதிகள் அடிக்கடி பதட்டம், இறுக்கத்துக்கு உள்ளாகும். இதனால் மன அழுத்தம் ஏற்படும்பொழுது அவை அதிகமாகிறது.
மன அழுத்தத்தின்போது ஏற்படும் தசை பதட்டம் தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.
மன அழுத்தம் உறக்கத்தின் தரத்தை குறைத்து, சரியாக உறங்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
பெண்களின் உடல் வலிக்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக முடியாது. ஆனால், மன அழுத்தமும் ஒரு பங்கு கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மன அழுத்தத்தை குறைக்க முடியுமானவரை முயற்சி எடுக்க வேண்டும்.