சம்பந்தனின் இறுதிக்கிரியை நாளை !
இலங்கைத் தமிழர் அரசியலில் மூத்த தலைவரும், தமிழரசுக் கட்சியின் காலஞ்சென்ற தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடல் நல்லடக்கம் நாளை அவரது சொந்த இடமான திருகோணமலையில் நடைபெறவிருக்கின்றது.
அன்னாரின் பூதவுடலுக்கு முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த பூதவுடல் தற்போது திருகோணமலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் கடந்த 1933 இல் பிறந்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சம்பத்தரிசியார் பாடசாலை, மொரட்டுவை புனித செபஸ்தியான் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்றார்.
அதன்பிறகு, இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
1956- ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இரா.சம்பந்தன் இணைந்தார்.
1977 இல் பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி அங்கம் வகித்த தமிழர்
விடுதலை கூட்டணி சார்பில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக எம்.பி. ஆனார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர், துணைத்தலைவர், இணை பொருளாளர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
கடந்த 2004- இல் இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக்
கூட்டமைப்பில் அங்கம் வகித்து,இரா.சம்பந்தன் தலைமையில், அந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற தேர்தலில் 22 இடங்களில் வெற்றி பெற்றது.
அமரர் அ.அமிர்தலிங்கத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆவது தமி ழரான இரா.சம்பந்தன், 2015_- 2018 காலகட்டத்தில் அப்பதவியில் இருந்தார்.
தனது 68 ஆண்டு கால அரசியல் வாழ்வில் இலங்கைத் தமிழர்கள்
மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக அவர் குரல் கொடுத்தார்.
இந்த நிலையில், வயது மூப்புகா ரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற் றுவந்த இரா.சம்பந்தன் கடந்த 30ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.