பதவி விலகினார் ரிஷி

பதவி விலகினார் ரிஷி

தொழிற்கட்சி மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக் பதவி விலகினார். 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சியின் பெரும் வெற்றி வியக்கத்தக்கது.

இந்நிலையில் பதவி விலகிய ரிஷி “உங்கள் கோபத்தை நான் அறிந்தேன்,” என டவுனிங் பகுதிக்கு வெளியே தனது இறுதி கருத்தைப் பதிவிட்டார்.

இதுவே அவர் பிரதமர் பதவியில் இருக்கும் போது இறுதியாக ஆற்றிய       உரை.தொழிற்கட்சியின் இந்த வெற்றியானது 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

தோல்வி குறித்து ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார். மேலும் இழப்பை தான் பொறுப்பேற்கிறேன் எனவும் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த இடைவெளி தலைகீழாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஐந்தாம் திகதி தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரதமரிடையே இடம்பெற்ற நேருக்கு நேரான விவாதத்தின் போது தொழிலாளர்களின் திட்டங்கள் உழைக்கும் குடும்பமொன்றிற்கு 2000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரி உயர்வைக் குறிக்கும் என அறிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் ரிஷி சுனக்கின் கூற்று பொய்யானது எனவும் தகவல்கள் வெளியாகின. இதன் பின்னரே ரிஷி சுனக்கிற்கான ஆதரவில் பெரும் சரிவு ஏற்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )