பொடுகு தொல்லையா ?

பொடுகு தொல்லையா ?

பெரும்பாலானோருக்கு ஏற்படும் முடி உதிர்வுக்கு பொடுகும் ஒரு காரணம். பொடுகில் இரண்டு வகைகள் உண்டு. அதில் வெள்ளை நிறத்தில் உதிரும் வகை, இன்னொன்று மண்டைப் பகுதியில் மெழுகு போல் படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத வகை.

மருத்துவ ரீதியாக பொடுகு ‘செபோரியா’ என்று அழைக்கப்படுகிறது.இந்தப் பொடுகுப் பிரச்சினையை வீட்டிலிருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே நீக்கிவிடலாம். அந்த வகையில் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்ப எண்ணெய், எலுமிச்சை போன்றவை பொடுகை நீக்குவதில் பெரும் பங்காற்றுகிறது.

பொடுகை விரட்டும் வேப்பிலை பேஸ்ட்டை எவ்வாறு தயாரிக்கலாம் எனப் பார்ப்போம்.

முதலில் வேப்ப இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல் அரைத்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் தலையிலிருக்கும் பொடுகு நீங்கும்.

இதேபோல் வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து விழுதாக்கி அதையும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கிவிடும்.இதனை வாரத்துக்கு ஒரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். எதுவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )