வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்

வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இலங்கை சுங்க தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட தமது வேலை நிறுத்தத்தை  கைவிட தீர்மானித்துள்ளன.

அதிகாரிகளிடம் இருந்து தமது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதில் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்க அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நேற்று (03) மற்றும் இன்று (04) ‘சுகயீன விடுமுறை’யை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தன.

அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களின் கோரிக்கைகளுக்கு தேவையான தீர்வுகள் எதுவும் கிடைக்காததால் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )