சுங்கத்துறை அதிகாரிகள் இரு நாட்கள் பணிப்புறக்கணிப்பு
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) ஆகிய இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தன்னிச்சையாக வருவாய் ஆணையச் சட்டம் கொண்டு வரவும், சுங்கச் சட்டத்தின் பல பிரிவுகளைத் திருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர்கள் இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தாரக குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எவ்வாறாயினும், தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.