இ-சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தும் அவுஸ்திரேலியா

இ-சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தும் அவுஸ்திரேலியா

நிக்கோட்டின் கலந்த இ-சிகரெட்டுகளை மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.

சில கடுமையான vape எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இ-சிகரெட்டுகளை கொள்வனவு செய்வதை கடினமாக்கியுள்ளது.

இதன்படி, திங்கட்கிழமை (01) முதல் இலத்திரனியல் சிகரெட்டுகளை கொள்வனவு செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரின் மருந்துச் சீட்டை மருந்தாளரிடம் கையளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இ-சிகரெட் பயன்படுத்துவோருக்கு மூன்று வகையான தேர்வுகள் அதாவது புதினா, மெந்தோல் மற்றும் புகையிலை ஆகியவை மாத்திரம் கிடைக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நாடுகள் ஏற்கனவே இ-சிகரெடுகளை பயன்படுத்துவதை தடை செய்துள்ளன.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அரசாங்கம் கடைகள், பணியிடங்கள் மற்றும் ஏனைய சிறிய சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இ-சிகரெட் விற்பனையை தடை செய்யவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )