பெண் தோழி இல்லாததால் பொம்மையோடு குடும்பம் நடத்தி வரும் இளைஞன்
இணையத்தில் தினமும் பல காதல் கதைகளை பார்க்கிறோம். அதில் பெரும்பாலானவை வைரலும் ஆகின்றன. சமீபத்தில் இதேப்போன்ற ஒரு காதல் கதை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் காதலர் தன் காதலியை நாள் முழுவதும் தனது இடுப்போடு சேர்த்து கட்டியபடியே அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார். ஆனால் நாம் நினைப்பது போல் அந்த ‘காதலி’ உண்மையான பெண் அல்ல. அதுவொரு பிளாஸ்டிக் பொம்மை.
இந்த நபருக்கு இதுவரை எந்தவொரு பெண் தோழியும் இல்லை. இதனால் இத்தனை ஆண்டுகள் தனிமையிலேயே வாழ்ந்து அவருக்கு போரடித்துவிட்டது. இதனால் தனக்கு நம்பிகையான பெண் தோழி வேண்டும், அதே சமயத்தில் அவள் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு யாரோடும் செல்லக்கூடாது என்று நினைத்த அந்த நபர், ஒரு பொம்மையை தனது காதலியாக மாற்றிக்கொண்டார்.
இந்த பொம்மைக்கு பிங்கி என்றும் பெயர் வைத்துள்ளார். ஒரு பிளாஸ்டிக் பொம்மை மீது காதல் கொண்ட இந்த இளைஞரின் பெயர் வித்யுத் மண்டல். இவர் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்பாரா என்ற ஊரைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் பக்ரீத் பெருநாளின் போது தனது பொம்மை காதலியோடு வித்யுத் பைக்கில் சென்ற வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது. இந்த பொம்மையை கடந்த அறு மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக கூறுகிறார் இந்த இளைஞர்.
எங்கள் உறவுமுறை குறித்து மற்றவர்கள் குறை கூறுவதையோ, கிண்டல் செய்வதையோ, கேள்வி கேட்பதையோ நான் கண்டுகொள்வதேயில்லை. என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை எனக் கூறுகிறார் வித்யுத். இவர் பைக்கில் எங்கு சென்றாலும் தனது ‘காதலியையும்’ பின்னால் அமர்த்திக்கொண்டு கூடவே அழைத்துச் செல்கிறார்.