நிர்வாக அதிகாரிகள் சங்கம் போராட்டம்
சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) ஆகிய இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.