கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபெல்கன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி ஃபெல்கன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

இந் நிலையில் 199 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபெல்கன்ஸ் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )