“ஈரானுடன் நெருக்கமாக இருப்போம்”

“ஈரானுடன் நெருக்கமாக இருப்போம்”

ஈரானுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதாக உமா ஓயா திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியும் இலங்கை ஜனாதிபதியும் இணைந்து உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ஈரானிய தொழில்நுட்பத்துடன் உமா ஓயா திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குவதற்கும் நாங்கள் உழைத்து வருகிறோம். அம்பாந்தோட்டைக்கு புதிய பொருளாதாரத்தை வழங்குகிறோம். இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஆறாயிரம் ஹெக்டேயர்களில் பயிர் செய்ய முடியும்.

எதிர்வரும் சில மாதங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி நீர் மின்சாரத்தை வழங்க முடியும்.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )