இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும்

இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும்

இன்று  (01) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் “ 30 ரூபாவாக இருக்கும் குறைந்த பட்ச பஸ் கட்டணம் இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும். இதன் பிரகாரம் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவாகும். தேசிய பஸ் கட்டண கொள்கைக்கு அமைய பஸ் கட்டணங்கள் திருத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )