“நீங்களே கணக்கு பாருங்கள்”
பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு வந்துள்ளாவருகை தந்திருந்தார்.
சந்தேகத்திற்கிடமான வகையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை வந்து வாக்குமூலம் வழங்க சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். போன வாரம் வரச் சொன்னாலும் சனிக்கிழமை தான் கடிதம் வந்தது. இன்னும் 25,000 ஆர்டர்கள் கிடைத்துள்ளன. எனது கிரீம் ஒன்றின் விலை சுமார் 35,000 ரூபாய். இதிலிருந்து மக்கள் தீர்மானிக்க முடியும். பியுமி ஹன்சமாலிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று கணக்கு பாருங்கள்.”
நான் தவறு செய்யவில்லை, பயமின்றி வந்தேன். தவறு செய்தவர்கள் பயப்பட வேண்டும். நான் எதையாவது கற்றுக்கொண்டு ஒரு வியாபாரம் செய்கிறேன். அது பொறுக்கவில்லை. சுமார் 5 மூடைகளுக்கு என்னிடம் டொகியுமின்ட்ஸ் உள்ளன. வங்கி மூலம் அனைத்தையும் சரியாகவே செய்தோம். இது போன்ற பிரச்சினைகள் வரும் என முன்னரே எமக்கு தெரியும்.
மக்கள் பொறாமைப்படுகிறார்கள். இலங்கை மக்கள் எப்படியும் அப்படித்தான். எனவே இலங்கையில் உள்ள அனைவரும் நயவஞ்சகர்கள் அல்ல. படித்துவிட்டு தொழில் செய்துவிட்டு கார் வாங்க முடியாதா? நான் சம்பாதித்து நல்ல கார்களை வாங்க முடியாதா?” என தெரிவித்துள்ளார்.