ஹிஜாப் அணிந்தால் பல லட்சம் அபராதம்

ஹிஜாப் அணிந்தால் பல லட்சம் அபராதம்

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் நாடு. இந்நாட்டில் 1 கோடி பேர் வசிக்கும் நிலையில், அதில் 96% பேர் இஸ்லாமியர்கள்.

இருப்பினும், அண்மை காலமாக மதசார்பற்ற நாடு என்று அடையாளப்படுத்தும் முயற்சிகளில் தஜிகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு தஜிகிஸ்தான் அரசின் கல்வித்துறை, இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய ஆடைகள் அணிவதற்கு தடை விதித்தது. அப்போதே ஹிஜாப் மீதான நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டது. இருப்பினும், தீவிர இஸ்லாமிய பற்றாளர்கள் பலர் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வரத் தொடங்கினர்.

இந்நிலையில், தற்போது ஹிஜாப் அணிய தடை விதிக்கும் சட்டத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி எம்மோலி ரஹ்மோன் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், ஹிஜாப் என்பது வேற்றுகிரகவாசிகளின் ஆடை என்றும் தஜிகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. தடையை மீறுபவர்களுக்கு 8 ஆயிரம் முதல் 65 ஆயிரம் சோமனி (Somani) அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை மதிப்பில் பல லட்சம் ஆகும். பொதுமக்களுக்குத்தான் இந்த அபராதத் தொகை.

பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், மத அலுவலர்கள் இந்த சட்டத்தை மீறினால், இதை விட அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பக்ரீத் பண்டிகையின்போது, பெரியவர்களிடம் இருந்து சிறுவர்கள் பணம் பெறும் மத சடங்கான ஈதி வழக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் ஜனாதிபதியின்  இந்த ஒப்புதல்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தஜிகிஸ்தானில் அந்நிய நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், கலாச்சாரம், பாரம்பரியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது, தஜிகிஸ்தான் நாடு உருவானது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அரசு அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாப் அணிய தடை இருக்கிறது. இதை பின்பற்றி, தஜிகிஸ்தான் அரசும் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )