இன்று முதல் அரச நிறைவேற்று சேவை பிரிவு அதிகாரிகளுக்க விசேட மாதாந்த கொடுப்பனவாக 25,000 ரூபா வழங்க தீர்மானம் !
அரச சேவையின் நிறைவேற்று பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுவரையில் சேவைக் காலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்குப்பதிலாக, சேவைக் காலத்தை கருத்தில்கொள்ளாது 25,000 ரூபாவை விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு கடந்த (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த கொடுப்பனவு இலங்கை பொறியியல் சேவை, இலங்கை கட்டடக்கலை சேவை மற்றும் இலங்கை நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் கிடைக்கவுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக மற்றும் உள் நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன கையெழுத்துடன் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக சேவையில் / பதவியின் விசேட தன்மையை கவனத்தில்கொண்டு விசேட கொடுப்பனவுக்கு அங்கீகரிக்கப்பட்ட சேவைகளுக்கு/பதவிகளுக்கு உரித்தான அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அமுல்படுத்தப்படும்.
விதிகளுக்கு உட்பட்ட கொடுப்பனவு / கொடுப்பனவு 25,000 ரூபாவிலும் பார்க்க குறைவு எனில், அவர்களுக்கு அந்த கொடுப்பனவு இந்தச் சுற்றறிக்கையின்படி கூறப்பட்ட கொடுப்பனவுகள் திருத்தப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதற்கமைவாக 07.01.2020 திகதியிடப்பட்ட அரச நிர்வாகச் சுற்றறிக்கை 18/2015 (IV) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 07.12.2019 திகதியிட்ட அரச நிர்வாகச் சுற்றறிக்கை எண். 18/2015 (III) 30.01.2024 முதல் இரத்துச் செய்யப்படுவதுடன் 12.12.2011 திகதியிட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 28/2011 இன் படி இலங்கை பொறியியல் சேவைஅதிகாரிகள், 12.11.2023 திகதியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 23/2013 இன் படி இலங்கை கட்டிடக் கலைஞர்கள் சேவை அதிகாரிகளுக்கும் இதேபோன்றே 13/1466/533/016 மற்றும் 31.10.2013 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட இலக்கம் 41.07 தீர்மானத்தின்படி மேற்படி ஏற்பாடுகளின்படி இலங்கை நில அளவை சேவை அதிகாரிகளுக்கு இந்த கொடுப்பனவுகள் இன்று
முதல் வழங்கப்படும்.
திறைசேரியின் ஒப்புதலுடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது மற்றும் இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.