சொர்க்கத்தை விற்ற தேவாலயம் : சதுரடி 100 டாலர் :வாங்கி குவிக்கும் மக்கள் !
மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் வழங்கியுள்ளார் எனவும் கூறி குறித்த தேவாலயம் இந்த விற்பனையில் ஈடுபட்டுவருகின்றது.
சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ,ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் இணையவழியில் பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
இதனால் பக்தர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
This Christian church in Mexico is selling plots of land in heaven, starting at $100 per square metre. 👀 pic.twitter.com/uwnHzJBZqh
— MeetCBN 2 (@oneheirs2) June 27, 2024