இந்தோனேசியா-ரஷ்யா இடையே மீண்டும் விமான சேவை

இந்தோனேசியா-ரஷ்யா இடையே மீண்டும் விமான சேவை

இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரு நாடுகள் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் அதனை மீண்டும் இயக்க இந்தோனேசியா முயற்சித்து வருகிறது. ஆனால் நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதுகுறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்த பிறகு விரைவில் இரு நாடுகள் இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை மந்திரி சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )