முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்
இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (19) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 6 மணிவரை இடம்பெறுகின்றது.
7 கட்டங்களாக நடைபெற உள்ள இந்திய பாராளுமன்றத் தேர்தலில், இன்று முதற்கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன.
முதற்கட்ட வாக்குப்பதிவுகளுக்காக 16.63 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 187,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.