பிராங்க் டக்வொர்த் காலமானார்

பிராங்க் டக்வொர்த் காலமானார்

ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான பிராங்க் டக்வொர்த் ( Frank Duckworth) தனது 84 வது வயதில் காலமானார்.

பிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ப்ராங்க் டக்வொர்த் மற்றும் சக புள்ளியியல் நிபுணரான டோனி லுவிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட டக்வொர்த் லுவிஸ் முறை, மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறை 1997 இல் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. 2001 இல் துண்டிக்கப்பட்ட விளையாட்டுகளில் திருத்தப்பட்ட இலக்குகளை அமைப்பதற்கான நிலையான முறையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டக்வொர்த் மற்றும் லுவிஸின் ஓய்வுக்குப் பிறகு இந்த முறை டக்வொர்த் – லுவிஸ் – ஸ்டெர்ன் முறை என மறுபெயரிடப்பட்டது.

டக்வொர்த் லுவிஸ் முறையானது சிக்கலான புள்ளியியல் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற பல காரணிகளைக் அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )