மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
மழையுடனான காலநிலை காரணமாகக் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
முருங்கைக்காய் ஒரு கிலோ கிராம் விலை 1,100 ஆகவும், கிழங்கு ஒரு கிலோ கிராம் 900 – 1,000 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 900 ரூபாயாகவும் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka