பொது மன்னிப்பை அறிவித்த இராணுவம்
முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 02, இற்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பின்வரும் ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டிதோடு, அதனை தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கைகள் 72 மணித்தியலங்களுக்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ அடையாள அட்டை (இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் நகல்).
தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர நகல்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் நகல்.
கடைசியாக பெற்றுக் கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் சம்பளப் பட்டியல் நகல்
(இருந்தால் மட்டுமே).
முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காதது தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.