அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஆப்கானிஸ்தான்

அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஆப்கானிஸ்தான்

T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (25) இடம்பெற்ற கடைசி லீக்கில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இந்நிலையில் ,ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை எடுத்தது.  இரண்டாவதாக களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் அரை சதம் அடித்து விளையாடினார். இறுதி வரை போராடிய லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.

இதனால் பங்களாதேஷ் அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )