கடந்த ஆண்டில் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு 5.2 பில்லியன் ரூபா இலாபம் !

கடந்த ஆண்டில் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு 5.2 பில்லியன் ரூபா இலாபம் !

தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 5.2 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுள்ளது.

கட்டண அதிகரிப்புக்குப் பின்னர், பெறப்பட்டுள்ள இந்த இலாபத்தால், விநியோகிக்கப்படும் நீரில் 25 வீதத்துக்கு பணம் கிடைக்கவில்லை என்றும் சபை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் சபையின்மொத்த வருமானம் 35.4 பில்லியன் ரூபாயிலிருந்து 61.8 பில்லியன்ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் மூலமான வருமானம் 33.1 பில்லியன் ரூபாவிலிருந்து
58.5 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் விநியோகச் செலவு 23.14 பில்லியன் ரூபாயிலிருந்து 32.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை மொத்த இலாபத்தை 12.3 பில்லியன் ரூபாவிலிருந்து 29. பில்லியன் ரூபாவாக அதிகரிக்க உதவியுள்ளது.

நிதிச் செலவுகள் 3.9 பில்லியன் ரூபாவிலிருந்து 14.9 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளன.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருடாந்த நிகர இலாபம் 5.2 பில்லியன் ரூபா அதற்கு முன்னைய ஆண்டு 2.7 பில்லியன் ரூபா நஷ்டத்தை சபை எதிர் நோக்கியிருந்தது.

இதேவேளை வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து 28 பில்லியன் ரூபாவை கடனை செலுத்துவதற்காக திறைசேரி வழங்கிதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )