மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு !

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு !

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமரி அத்தபத்து தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து வீராங்கனை உதேஷிகா பிரபோதனி மற்றும் சுழற்பந்து வீராங்கனை இனோகா ரணவீர ஆகியோர் இடம்பெறவில்லை.

எனினும் சுழற்பந்து வீராங்கனை ஓஷதி ரணசிங்க 16 பேர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அதற்கமைய சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியில், விஷ்மி குண
ரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா,
கவிஷ டில்ஹாரி, ஓஷதி ரணசிங்க, இனோஷி பெர்னாண்டோ,
சுகந்திகா குமாரி, அமா காஞ்சன, ரஷ்மிகா செவ்வந்தி, இமேஷா
துலானி, ஷஷினி கிஹானி, காவ்யா கவிந்தி, சச்சினி நிசன்சலா,
கெளஷினி நுத்யங்கனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )